சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Monday, April 4, 2011

slumdog காதலன்


உன் பண்டிகை தின
புத்தாடை நானில்லை
நீ தினம் உடுத்தும் கிழிந்த சீருடை நான்

நீ என்றோ ஒரு நாள் தின்னும்
கறியும் சோறும் நானில்லை
நீ தினம் குடிக்கும்
பழைய கஞ்சி நான்

நீ ஆசையோடு பார்த்து
கடந்து போகும்
அந்த நகை கடையின்
வெள்ளிகொலுசு நானில்லை
உன்னோடு தினம்
நடக்கும் உன் காலின்
தேய்ந்த செருப்பு நான்

வறுமையிலும் உன்னை
காதலிப்பதால் நான்
என் வறுமையையே
காதலிக்கத் தொடங்கி விட்டேன்

No comments:

Post a Comment

சொலவடை