அன்னிக்கி ஒரு நாள் நைட்டு நானும் மொக்க முருகேசனும் மெஸ்சுல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தோம் , மொக்க எங்கிட்ட மெதுவா , ஏன்யா அந்த மைனா படத்துல நடிச்ச பொண்ணு பேரு என்னனு கேட்டாரு , அவ பேரு அமலாபால்னு சொன்னேன், உடனே மொக்க சத்தமா என்னையா பேரு அமலாபாலு , ஆவின் பாலுன்னு இருக்குன்னு சொன்னார் , எனக்கு சரியான கடுப்பு , யோவ் அது கிறிஸ்தவ பேரு யா , மலையாளத்துல குஞ்சுன்னினு கூடத்தான் பேரு வப்பாயங்க அதயெல்லாம் அப்டியேவா தமிழ்ல அர்த்தம் பண்ணிக்குறது போயா அங்கிட்டு .....
மொக்க no :2
அப்போ அண்ணா ஹசாரே ஊழல எதிர்த்து உண்ணா விரதம் இருந்த சமயம், முருகேசன் கிட்ட போயி , யோவ் வாயா நாமளும் போய் உண்ணா விரதத்துல கலந்துக்கலாம்னு சொன்னேன், அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா, "கலந்துகிட்டா பிரியாணி பொட்டலம் தருவாயிங்கலான்னு கேக்குறாரு" ????
மொக்க no :3
வரவர மொக்க முருகேசன் ஓவரா அரசியல் பேசுறாரு விஜயகாந்த் கருப்பு MGR நா அம்மா என்ன சிவப்பு விஜயகாந்தான்னு கேக்குறாரு
No comments:
Post a Comment