சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Saturday, April 9, 2011

படித்ததில் பிடித்த சிறுகதைகள்


  1. இருபத்துநாலு பெருக்கல் ஏழு -- இரா.முருகன்
  2. பொம்மை -- ஜெயகாந்தன்
  3. கதவு --- கி.ராஜ நாராயணன்
  4. குருதிக் கடன் -- சுஜாதா
  5. ஒரு ஞானி ஒரு முட்டாள் -- வண்ணதாசன்
  6. இருபத்து ஒன்பது கட்டளைகள் -- வாஸந்தி
  7. உதிரிப் பொய்கள் -- எஸ்.ராமகிருஷ்ணன்
  8. தப்பு+தப்பு=சரி ---ராஜேஷ்குமார்
  9. பின்பனிக்காலம் ---நாஞ்சில் நாடன்
  10. பாலத்துக்கு அடியில் பகவத் கீதை --- ஜ.ரா .சுந்தரேசன்
  11. வள்ளுவர் கோட்டம் -- பாஸ்கர் சக்தி
  12. நல்லதோர் வீணை -- பட்டுக்கோட்டை பிரபாகர்
  13. குறுஞ்செய்திகளை கடத்தும் கோபுரம் -- க.சீ.சிவகுமார்
  14. சுவாமிநாதனின் உயில் --சுபா
  15. உறைந்த நொடியின் கத்தி முனை -- தமயந்தி
  16. வலி சூழ் வாழ்வு -- ஐஸ்வர்யன்
  17. ஒரு கடத்தல் கார் -- புஷ்பா தங்கதுரை
  18. அகிலம் -- அனுராதா ரமணன்

Friday, April 8, 2011

மொக்க முருகேசனும் நானும்


 மொக்க no :1 

அன்னிக்கி ஒரு நாள் நைட்டு நானும் மொக்க முருகேசனும் மெஸ்சுல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தோம் , மொக்க எங்கிட்ட மெதுவா , ஏன்யா அந்த மைனா படத்துல நடிச்ச பொண்ணு பேரு என்னனு கேட்டாரு , அவ பேரு அமலாபால்னு சொன்னேன், உடனே மொக்க சத்தமா என்னையா பேரு அமலாபாலு , ஆவின் பாலுன்னு  இருக்குன்னு  சொன்னார் , எனக்கு சரியான கடுப்பு , யோவ் அது கிறிஸ்தவ பேரு யா , மலையாளத்துல குஞ்சுன்னினு கூடத்தான் பேரு வப்பாயங்க அதயெல்லாம் அப்டியேவா தமிழ்ல அர்த்தம் பண்ணிக்குறது போயா அங்கிட்டு .....

மொக்க no :2
அப்போ அண்ணா ஹசாரே  ஊழல எதிர்த்து உண்ணா விரதம் இருந்த சமயம், முருகேசன் கிட்ட போயி , யோவ் வாயா நாமளும் போய் உண்ணா விரதத்துல கலந்துக்கலாம்னு சொன்னேன், அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா, "கலந்துகிட்டா பிரியாணி பொட்டலம் தருவாயிங்கலான்னு கேக்குறாரு" ????

மொக்க no :3
வரவர மொக்க முருகேசன் ஓவரா அரசியல் பேசுறாரு விஜயகாந்த் கருப்பு MGR  நா அம்மா என்ன சிவப்பு விஜயகாந்தான்னு  கேக்குறாரு

Thursday, April 7, 2011

நேரம் கிடைச்சா கண்டிப்பா படிங்க



  1.  கதாவிலாசம் - -எஸ். ராமகிருஷ்ணன்
  2. உலக சினிமா I ,II - செழியன்
  3. இது சிறகுகளின் நேரம் - கவிக்கோ
  4. ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன்
  5. அத்தனைக்கும் ஆசைபடு - சத்குரு 
  6. திருக்குறள்   
  7. ஏழாவது அறிவு-வெ.இறையன்பு 

Wednesday, April 6, 2011

எங்கயோ படிச்சதுங்க


  • உங்க கண் கண்ணாடியின்  அழுக்கை துடைக்காமலே உலகமே அழுக்கானதுன்னு சொல்றீங்க  ...
  • நாம எல்லோரும் ஆடைக்குள்ள அம்மணமா தான் இருக்கோம்
  • அடுத்த கிரஹத்த பத்தி எல்லாம் ஆராயஞ்சுட்டோம் , ஆனா இந்த பூமில சந்தோசமா இருக்குறத பத்தி மட்டும் யோசிக்கவே மாட்டோமா ???
  • உங்களை அன்பானவராக அறிவித்துக் கொள்வதில் அர்த்தமில்லை , அர்பணித்துக் காட்டுங்கள் 
  • மற்றவர்களிடம் நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் இருப்பது நீங்கள் மட்டும் தான்

Monday, April 4, 2011

slumdog காதலன்


உன் பண்டிகை தின
புத்தாடை நானில்லை
நீ தினம் உடுத்தும் கிழிந்த சீருடை நான்

நீ என்றோ ஒரு நாள் தின்னும்
கறியும் சோறும் நானில்லை
நீ தினம் குடிக்கும்
பழைய கஞ்சி நான்

நீ ஆசையோடு பார்த்து
கடந்து போகும்
அந்த நகை கடையின்
வெள்ளிகொலுசு நானில்லை
உன்னோடு தினம்
நடக்கும் உன் காலின்
தேய்ந்த செருப்பு நான்

வறுமையிலும் உன்னை
காதலிப்பதால் நான்
என் வறுமையையே
காதலிக்கத் தொடங்கி விட்டேன்

சொலவடை