சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Sunday, July 1, 2012

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் : பச்சையான படத்திற்கு பச்சையான விமரிசனம்

அன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக பார்க்கும் மானங்கெட்ட தமிழ் வீரப் பரம்பரைகளே!!! நீங்கள் வாய் நிறையப் புகழ அனுராக் காஷ்யப்  ஒரு படம் எடுத்துள்ளார் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்று. ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் இல்லாதது புதிதாக இப்படத்தில் இருந்தால் நீங்கள் வாய் நிறைய புகழ்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. உதாரணமாக நண்பர் தியாகராஜன் குமாரசாமி ஆரண்ய காண்டத்தில் ஒப்பன ஓலி, கண்டார ஓலி, தூமியக் குடிக்கி என்று வழக்கொழிந்த தமிழ் கெட்ட வார்த்தை சொற்களை பயன்படுத்தினார், அப்பொழுதெல்லாம் அட ராமா என்று காதை பொத்திய தமிழன், அனுராக் காஷ்யப் இப்படத்தில் மாதர் சோத், போஸ்டீகே, சூத்தியா என்று வசைச் சொற்களை பயன் படுத்தியபோது , அபாரம் உண்மைக்கு மிக அருகில் சென்று படம் பிடித்துள்ளார் என்று புகழ்வது இலை நிறைய மனிதக் கழிவை போட்டு உண்பதற்க்கு சமமாகும். மேலும் இப்படம் முடியும் தருவாயில் அப் கஹானி பாக்கி ஹை என்று போடுகிறார்கள் அதாவது கதை இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். இந்த ட்ரெண்டை ராம் கோபால் வர்மா எப்பொழுதோ ரத்த சரித்திரத்தில் பயன் படுத்திவிட்டார்.  இரண்டாம் பாகத்தில் என்ன காட்டப் போகிறீர்கள், சர்தார் கானின் குலக் கொழுந்துகள் ரபீந்திர சிஙகை பழிவாங்கப் போகிறார்கள், இதைத்தானே ராம் கோபால் வர்மா ரத்த சரித்திரத்தில் சூரி ,பரட்டல் ரவியை பழிவாங்குவதைப் போல் காட்டினார். 
                                               மேலும் கதையின் நாயகன், சர்தார் கான் ஏற்கனவே ஒரு மனைவி(நக்மா) இருந்த போதும், துர்கா என்றொரு வங்காளப் பெண்மணியின் மீது காம மோகத்தின் பால் கைவத்து விடுகிறான். இதை ஏற்கனவே புதுப்பேட்டையில் காட்டிவிட்டனர், நான் தனியாக விளக்கதேவையில்லை.
இந்தப் படம் ரத்த சரித்திரம், புதுப் பேட்டை, ஆரண்ய காண்டம் மற்றும் சுப்பைரமணியபுரத்தின் கலவையே. இப் படம் வட இந்தியனுக்கு ஒரு புதிய அனுபவம் ஆனால் இந்த ஃபார்முலாக்களையெல்லாம் தமிழன் என்றோ பயன்படுத்திவிட்டான். So Mr, Anuraag there is nothing special in this film to attract south Indian people. so please serve your shit to your peoples.  மேலும் படத்தின் பல இடங்களில் பழைய பாடல்களை பயன் படுத்தியுள்ளார்கள், இந்த ஃபார்முலாவும் தமிழனுக்கு தெரிந்ததே!!!. படத்தில் ஒரு ரயில் பயணத்தில் சர்தார் கான் இரண்டாவது மகன் துப்பாக்கி வாங்கிக்  கொண்டு வருகையில் , 80களில் பாப்புலராக இருந்த ஹிப்பிகளை பயன் படுத்தி ஒரு பாட்டு எடுத்திருந்தது வெகுவாக ரசிக்க வைத்தது. வேறொன்றும் புதிதாக படத்தில் இல்லை. தமிழர்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன் ஆரண்யகாண்டம், சுப்பிரமணியபுரம், மற்றும் புதுப்பேட்டை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படங்களையெல்லாம் ஒன்றுமில்லை என்று இகழ்ந்துவிட்டு இப்படத்தை புகழும் அரைவேக்காடுகள் நல்ல விமர்சகனாக அல்ல, நல்ல ரசிகனாக கூட ஏற்றுக்கொள்ளப் படமாட்டான். 
   நான் மேலே பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன் என்ற உயரிய மனப்பான்மையில்( Superiority Complex) பதிவிட்டது. உங்களது மேலான கருத்துகளை என்னுடன் பச்சையாக பகிர்ந்து கொள்ளலாம். இப்படம் இந்திய சினிமாவின் மற்றுமொரு கேங்ஸ்டெர் மூவி அவ்வளவே

         PS: தமிழில் பேசினால் அது கெட்ட வார்த்தை அதையே ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினால் அது நவநாகரீகம். போங்கடா சூத்தியாஸ்!!!!!!!!!

3 comments:

 1. ////தமிழில் பேசினால் அது கெட்ட வார்த்தை அதையே ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினால் அது நவநாகரீகம். போங்கடா சூத்தியாஸ்!!!!!!!!!//// good final touch :)

  ReplyDelete
 2. nalla karthu..... innimelavathu tamil padankalai puzhukangal......

  ReplyDelete
 3. எனக்கும் ரத்த சரித்திரம் சாயலே தெரிந்தது. ஆனால் அனுராக் இந்த படத்திற்கு "Thanks to Madurai Triumvirate Bala, Ameer, Sasikumar" என்று டைட்டில் கார்டிலேயே போட்டுவிட்டார். சுப்பிரமணிய புரமும், ஆரண்ய காண்டமும் பார்த்துவிட்டு, கே.வாஸிப்பூர் பார்க்கையில் நம் தமிழ் சினிமா முன்னோடியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
  இந்த வரிசையில் புதுப்பேட்டையை சேர்க்காதீங்க. நல்ல கதையை, தனுஷை larger than life கதாநாயகனாக்கி, அதுவும் சோனியாவை திடீரென தாலிகட்டியதிற்கு பின் வருவது எல்லாமே மலினமான தமிழ் வணிக சினிமாவாக மாற்றிவிட்டார் செல்வராகவன். பிற்பாடு City of God பார்த்தவுடன் அது ஏன் உலகப்படம் என்று தெரிந்தது.
  City of God ல் கதைதான் ஹீரோ. கதாநாய் என்று யாரும் இல்லை. கதையை சொன்ன விதமும் அற்புதம். என்னை பொறுத்தவரை புதுப்பேட்டை City of God ன் மிக மோசமான தமிழ் சினிமா காப்பி. :(
  - ஜெகன்.

  ReplyDelete

சொலவடை