
இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே, விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின் புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம் எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய். சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த மக்களிடம்.
எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம். எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம். அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும் வெளிநாட்டுல செட்டில் ஆக ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர் என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி. கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே.
தினங்காலையில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
என் ஊரின் ஞாபகம்
வரும்போதெல்லாம்
வரும்போதெல்லாம்
ரொம்ப தீவிரமா சிந்திச்சிருக்கீங்க போல...
ReplyDelete;-)))
Deleteநல்ல சிந்தனை. பெரும்பாலான ஆண்களுக்கு வெளிமாநிலங்களில் போய் தங்கினால் தான் தங்களின் அம்மா மற்றும் குடும்பத்தின் மதிப்பு தெரிகிறது :) உங்கள் கொல்கொத்தா வாழ்க்கையைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.
DeleteWell said. Happy to hear abt your experience. Back home is a good feeling. Longing for that day still .
ReplyDelete