சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Tuesday, July 3, 2012

ஒரு ஆணாதிக்கவாதியின் வாக்குமூலம் - Confessions of a ஆணாதிக்கவாதி

                                  இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக ஆணாதிக்கதிற்கு நிகரான ஆங்கிலச் சொல்லை கூகிளில் தேடினேன். I have found some approximate words related to it, not an exact word. அப்படியென்றால் இந்த வார்த்தையும், இழிநிலையும் என்னைச் சுற்றி உள்ள சமூகத்தில் தான் நடைமுறையில் உள்ளனவா?. இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது நண்பர் ஒருவரின் முகநூல் அப்டேட்டே! அதில் ஒரு நடிகையை வேசியாக சித்தரித்து எழுதியிருந்தார். அவரைப் பற்றி குறை சொல்லப் போவதேயில்லை இந்தப் பதிவு. இது ஆணாதிக்கவாதியான என் வாக்குமூலம் அவ்வளவே!! ஒரு பெண்ணை இழிவாக பேச அவள் பெண்ணென்ற ஒரு தகுதி போதும், அதுவும் அவள் நடிகையாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உண்மையிலேயே ஒரு பெண்ணை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் அணு அணுவாக ரசிப்பவன் ஒரு ஆணே. தன்னால் அடைய முடியாத ஒரு பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசும்போது அவளை வன்மையாக புணர்ந்தது போல ஒரு காமநிலைப் பரவசம் ஏற்படும், இதை ஒரு ஆணாக நானும் உண்ர்ந்திருக்கிறேன். என்னுடைய இயலாமையை ஆணாதிக்கம் என்ற பெயரில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையோ ஒரு பெண்ணோ தரக் குறைவான ஆடை உடுத்தி வந்தால் கலாச்சாரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவேன் ஆனால் யாருமற்ற தனிமையில் எனக்கு பிடித்த ந்டிகையை நினைத்து என்னை நானே சுயமாக கற்பழித்துக் கொள்வேன். சில பெண்கள் என்னிடம் மிகுந்த கர்வம் கொண்டு நடந்ததுண்டு. அவர்களைப் ப்ழிவாங்குவதற்காக ஆணாதிக்கத்தை நான் கையில் எடுத்ததுண்டு. குறிப்பாக அழகான பெண்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை திமிர் பிடித்தவர்களே. இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு பெண்ணாலும் காதலிக்கப் படாதவனே ஆணாதிக்கத்தில் அதிகமாக ஈடுபடுகிறான். ஒரு தடவை கூட காதலிக்காதவன் காதல் சோகப் பாடல்களையோ, பெண் எதிர்ப்பு பாடல்களையோ சத்தமாகப் பாடுகிறான், சமீபகாலமாக இது போன்ற பாடல்கள் அதிக அளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது எல்லாம் என் இயலாமைக்கு ஆறுதல் தருவது போன்று இருந்தாலும் அது வியபார தந்திரம் என்று ஏன் எனக்கு தெரியவில்லை.
           பெண்களிடம் ஒரு வேண்டுகோள் ஆணாதிக்கவாதிகளான எங்களிடம் கோபம் கொள்ளவேண்டாம், முடிந்தால் சிறிது பரிதாபம் காட்டுங்கள். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் மனநிலை பாதிக்கப்பட்டே, நான் ஆணாத்திக்கவாதியாக நடந்து கொள்கிறேன். இந்தப் பதிவை எழுதி முடிக்கையில் என் காயங்களின் சீழ் வடிக்கப்ப்ட்டு குருதி வழிந்தது போன்றொரு உண்ர்வு. 

6 comments:

 1. டே யாரடா அந்த முகநூல் நண்பர்... நான் ஏதும் உளறியிருந்த மன்னிச்சிரு தம்பி....ஹி ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. அட அது நீங்க இல்லீங்க அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் கிடையாது ;-p

   Delete
 2. ஆணாதிக்கத்திற்கு நிகரான ஆங்கில வார்த்தை இல்லை. அதே போல whore என்ற வார்த்தைக்கும் நிகரான ஆண்களை குறிக்கும் வார்த்தை இல்லையென நினைக்கிறேன். ஆண்கள் தான் அவர்களை அது போல மாற்றுகிறார்கள். ஏனென்றால் இந்த உலகமே ஆணாதிக்கத்தால் ஆனது. அமெரிக்காவில் வாழும் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்தாலும் அங்கும் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. % இல் மட்டும் குறையலாம். இதை மாற்ற முடியாது.


  Women Are Crazy Men Are Stupid but Women Are Crazy Because Men Are Stupid.

  இது தான் உண்மை.

  ReplyDelete
 3. // இது எல்லாம் என் இயலாமைக்கு ஆறுதல் தருவது போன்று இருந்தாலும் அது வியபார தந்திரம் என்று ஏன் எனக்கு தெரியவில்லை. //

  செம தத்துவம்... இதே ஆதங்கத்தை என்னுடைய சில இடுகைகளில் வெளிப்படுத்தியிருப்பேன்... ஆண்களுடைய (குறிப்பாக ஃபிகர் கிடைக்காத மொட்டை பசங்க) வீக்னெசை ஓகேஓகே ராஜேஷ், தனுஷ், செல்வராகவன் மாதிரி ஆட்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்...

  ReplyDelete
 4. male chauvinism என்ற வார்த்தை இருக்கிறதே...

  ReplyDelete

சொலவடை