என் மனம் காமத்தின் பால் ஈர்க்கப்பட்ட நள்ளிரவுகளில், வேறு எதைப் பற்றியும் என் நினைவை திசை திருப்ப முடியாத இக்கட்டான சூழலில் என் பொறுமையை சோதிப்பதற்காக சில திரைப்படங்களை பார்ப்பது வழக்கம். படம் மிகவும் தொய்வாகச் சென்றால் என் மனக் குரங்கு மீண்டு காமக் கிளைக்கே தவ்வி விடும். அப்படி ஒரு சூழலில் இந்தப் படத்தை பார்க்க தொடங்கினேன். ஆரம்பம் முதல் ஒவ்வொரு நொடியும் தன் அபார நடிப்பால் என் கவனத்தை முழுமையாக அவர் பக்கம் ஈர்த்துவிட்டார் ஜாக் நிக்கல்சன். அவரின் ஷைனிங் படத்தைப் பார்த்து ஓரிரு நாட்கள் கண்ணாடி முன் அவரைப் போல் செய்து பார்த்ததுண்டு. பின வருவது One Flew over the cuckoo's Nest சில குறிப்புகள்:
படத்தின் Premise: புத்திசாலித்தனமான , வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கக் கூடிய ஒருவன் மனநல காப்பகத்தில் அடைக்கப் பட்டால் என்னாகும்.

இப்படத்தின் Premise ஐ தழுவியே Shasank Redemption எடுத்திருக்கக் கூடும். நமது இந்திய சினிமாக்களில் ஏகப் பட்ட படங்கள் இந்தப் படத்தின் பாதிப்பால் எடுக்கப்பட்டவை. அப்படி எடுத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில் இப்படத்தை தழுவி எடுக்கப்படம் ஒவ்வொன்றும் மனித நேயத்தை வளர்க்க நாம் எடுக்கும் முயற்சியே. உதாரணமாக, முன்னா பாய் MBBS, அறையெண் 305 கடவுள், முக்கியமாக போராளி போன்ற படங்களுக்கு நன்றி.
படம் முடிவடைகையில் நம்முள் உழன்று கெடுக்கும் பைத்தியத்தை தெளிய வைத்து விடுகிறார் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மன். இவரிம் அமேதியஸையும் முடிந்தால் பார்க்கவும்.
Amadeus போனவாரம் தான் டவுன்லோட் பண்ணினேன். இந்தப் படம் இப்பொழுது டவுன்லோட் ஆகிறது. ஞாபகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteகச்சிதமான அளவான விமர்சனம்.