மூன்றாம்
வகுப்பின் தொடக்கத்தில் இருந்து சில வருடங்களுக்கு எனக்கு மூக்கின் மேல்
சரியான வெறுப்பு இருந்தது. மனிதனுக்கு ஏன் மூக்கைப் படைத்தாய் என்று
ஆண்டவனை கோபப் படும் அளவிற்கு. காரணம் மூன்றாம் வகுப்பில் என் பக்கத்தில்
அமர வைக்கப் பட்ட ஊளை மூக்கு சுந்தரபாண்டியன். வற்றாத ஜீவநதிகூட
வத்திப்போகலாம். ஆனா நம்ம சுந்தரம் மூக்குல ஒடுற காட்டாறு மட்டும் வற்றாமல்
ஓடிகிட்டே இருக்கும். அவன் என் பக்கத்தில் உட்காரவைக்கப் பட்ட அன்று முதல்
சுந்தரத்தயும், எல்லோருடய மூக்கயும் வெறுக்க ஆரம்பித்தேன். தினந்தோறும்
பள்ளி செல்லவே வெறுப்பாகத் தோன்றும், வேறு பெஞ்சு மாறி உக்காந்தாலும்
முதுகுல பல கோடுகளுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம். சுந்தரம்
எப்போது தும்முவான் என்று மனம் பதை பதைத்துக் கொண்டெ இருக்கும். அவன்
தும்மிவிட்டால் சில வேளைகளில் ஒரு துளி சளி பறந்து வந்து என் மேல் கோந்து
போல் ஒட்டிக் கொள்ளும். அது மாதிரியான நாட்களில் குளிப்பதயே வெறுக்கும்
நான், வீட்டுக்குப் போய் ஐந்தாறு முறை குளித்து விடுவேன்.
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு நான் ஏன் மூக்கை வெறுத்தேன் என்று. சில நேரங்களில் சுந்தரம் விளையாட்டுக்கு என்று சொல்லி தன் மூக்கினுள் கை விட்டு எடுத்து என் மேல் அப்பி விடுவான். அப்போதெல்லாம் அவன் மூக்கை மட்டும் அல்ல , உலகத்தில் உள்ள எல்லோர் மூக்கையும் கத்தி கொண்டு அறுத்தால் என்ன என்று தோன்றும். அந்த காலகட்டங்களில் எல்லாச் சிறுவர்களையும் போல நானும் ரஜினி ரசிகன். தலைவருக்கு மூக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருப்பாரோ என்று கூட தோன்றும். இப்படியே என் வாழ்க்கை மூக்கோடு விரோதத்தை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. மூன்றாம் வகுப்பு முடிந்து நான்காம் வகுப்பிற்க்கு மாறிச் செல்ல காத்திருந்த வேளையில் மனம், இந்த ஆண்டு சுந்தரத்தின் பக்கத்தில் என் எதிரியான பரமசிவனை உக்காரவைக்க வேண்டும் என்று எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தது. வெகு நேரம் ஆகியும் சுந்தரம் பள்ளிக்கு வரவே இல்லை. அவன் குடும்பத்துடன் மெட்ராஸுக்கு போய் விட்டதாக பேசிக் கொண்டார்கள். காலங்கள் உருண்டோடியது. மூக்கு தான் சுவாசிக்கப் பயன் படும் உறுப்பு என்றும், வாசனைகளை நாம் உணர மூக்கு தான் பயன்படுவதாகவும் பின் வரும் வகுப்புகளில் எனக்கு பாடம் கற்பிக்கப் பட்டது. மூக்கின் மேல் உள்ள வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் காதலியின் மூக்கு சவிழ்த்துப் போட்ட ஏழு போன்று அழகாக இருப்பதாகக் கூட மனம் கவிதை பாடியது. கல்லூரி வாழ்க்கை முடிந்து சென்னையில் வேலை தேடிக் கொணடிருந்த ஒரு நாள், சுந்தரம் என்னிடம் விட்டுச் சென்ற நாற்றம் கலந்த ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது. மெல்ல திரும்பி பார்த்தேன். மூன்றாம் வகுப்பில் என்னுடன் படித்த அதே சுந்தரபாண்டியன் தான். யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். தான் இப்போது அமெரிக்காவின் ஆப்பிள் என்னும் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாதம் ஐம்பதாயிரத்துக் மேல் சம்பளம் என்றும் ஆங்கிலத்தில் பீத்திக் கொண்டிருந்தான். நான் அவனை பார்த்து மெல்ல புன்னகைத்து ,டேய் சுந்தரபாண்டி எப்பிடிலே இருக்க ஆளே மாறிட்டியேடே என்றேன். அவன் என்னை மேலும் கீழும் பார்த்தபடியே “சாரி ஐ காண்ட் ரிமெம்பர் யு, அனிவே ஐ யம் ஷுயாம் சுந்தர் நைஸ் டூ மீட் யூ” என்று சொல்லியவாறே எனக்கு கை கொடுக்க வந்தவன், என் உள்ளங்கையின் வியர்வையைப் பார்த்து அன்று நான் அவனிடம் காட்டிய அதே அருவருப்பை என்னிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.

No comments:
Post a Comment