கல்லூரி நாட்களின் ஏதோ ஒரு இரவில்
நானும் , நம்ம சித்தப்பு சிந்து பாண்டியனும், ருசி டீகடயில இருந்து
காலேஜுக்கு நடந்து போயிட்டு இருந்தோம். பின்னாடி மேக்ஸ்வெல்லும் பர்மாவும்
வந்துகிட்டு இருதாய்ங்க. சித்தப்பு சாதாரணமா இருக்கும் போதே அசாதரணமா
சேட்டை பண்ணுவாரு. அன்னிக்கி கொஞ்சம் அசாதாரண நிலையில வேற இருந்தாரா,
கேக்கவா வேணும். பயங்கர அலம்பல குடுத்துட்டு வந்துகிட்டு இருந்தாரு. அப்போ
காலேஜ் காம்பெளண்ட் சுவர் கட்டுரதுக்காக ரோட்டு ஓரமா செங்கல் அடிக்கி
இருந்தாங்க. சொல்ல சொல்ல கேக்காம சித்தப்பு ஒரு கல்ல எடுத்து ரோட்டுல வீசி
எறிஞ்சார். கல்லு ஒரு அரை நீள் வட்டப் பாதையில் காற்றில் பயணித்து சாலையில்
விழுந்து நொறுங்கியது. செங்கல் சிதறி விழுந்த மறுகணமே ஒரு போலீஸ் ஜீப்பு
எங்களை கடந்து எங்களுக்கு முன்னாடி போயி நின்னுச்சு. எனக்கு இதய துடிப்பே
நின்னுருச்சி. யோவ் சித்தப்பு கூட்டிட்டு போயி கழட்டி விட்டு நொங்க கழட்ட
போறானுவ, ஐயோ இன்னிக்கீனு பாத்து நான் ஜட்டி வேற போடலியே. எல்லாம்
உன்னாலதாம்யானு நான் அவர திட்டிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தேன். அந்த
ஜீப்பு மெல்ல ரிவர்சுல வந்துகிட்டு இருந்தது. எனக்கு வயிரோட சேந்து குடலு,
குந்தானி எல்லாம் கலங்கிட்டு இருக்கு. பின்னாடி வந்த அந்த ரெண்டு
பன்னாடைங்க எந்த பொதருக்குள்ள பாஞ்சானுவன்னு தெரில. ஜீப்பு எங்க பக்கத்துல
வந்து நின்னுருச்சி. அதுல ட்ரைவர் சீட்டுல இருந்த போலீஸ் தலய வெளிய நீட்டி,
ஏலே இந்த சாத்தான்குளம் விலக்கு எப்பிடி போகனும் வழிய சொல்லுத்தீகளா? னு
கேட்டாரு. எனக்கு வாயவே திறக்க முடியல. ஆனா சித்தப்பு எதுவுமே நடக்காத
மாதிரி, அந்த போலீசுக்கு வழிய சொல்லிட்டு அவன் போனதுக்கப்புறம் இன்னொரு
செங்கல்ல கயில எடுத்தாரு, நான் எடுதேம்பாருங்க ஓட்டம், சாமி சத்தியமா இனிமே
உங்க கூட சேந்து குடிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டெ.....
No comments:
Post a Comment