சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

GCE நினைவுகள்:


GCE நினைவுகள்:
                                
நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது,சார்லி சாப்ளின் சொன்ன அருமையான வாசகம், எப்போதெல்லாம் நான் தனியா இருக்க வேண்டிய நிலைமை வந்தாலும், சில அருமையான விஷயங்கள நினைவுகளை அசை போடுவதுண்டு, சமீபத்துல பஸ்சுல ஒரு லாங் ட்ராவல் பண்ண வேண்டியிருந்தது, இப்பெல்லாம் பஸ்சுல  பக்கத்துல இருக்கிறவன்கூட  பேசுனாலே தப்பா நினைச்சுக்கிறாங்க, ஒன்னு திருடன்னு நினைப்பாங்க இல்ல "அவனா நீ" நு நினைச்சுடுவாங்க, எதுக்கு வம்புனு கண்ண மூடி கல்லூரில வாழ்க்கைல  நடந்த விசயங்கள நினைச்சுப் பாத்தேன்.
முதல் முதல்ல நான் ஹாஸ்டல் சேந்தது காலேஜ் படிக்கிற போதுதான். என்னோட நெருக்கமான சில  நண்பர்கள பத்தி என்னோட நினைவுகளை செலுத்தினேன். எப்டி வாழ்வது என்று எனக்கு கத்துக் கொடுத்த அந்த சில பேர்.
  • முதல்ல மேக்ஸ்வேல்ல பத்தி பாப்போம், ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி நடிப்பான், கடமையை செய், பலனை எதிபாராதேனு  கீதைல கிருஷணர் சொன்னது எங்களுக்கு சரியாய் புரியல, ஆனா பைபிள் படிக்கிற மேக்ஸ்வெல் எங்களுக்கு அத சரியாய் புரிய வச்சான். எங்களுக்காக நிறைய விசயத்த செஞ்சுட்டு , கடைசி வரை எதுவுமே செய்யாத மாதிரியே இருந்துட்டான்." யார்கிட்டயும் எதையும் எதிபார்க்காம எப்டி பழகனும்னு" நான் அவன்கிட்ட இருந்து தான் கத்துக் கிட்டேன்.
  • அப்புறம் கப்பு என்கிற கபாலி என்கிற பாஸ்கரன பத்தி பாப்போம், பேல் பூரி கடை, காளான் கடை, சங்கரன் கோயில் பிரியாணி கடை, ஜங்ஷன் ஆட்டுக் கால் சூப்பு கடைன்னு எல்லா இடத்துலயும் அக்கௌன்ட் வச்சிருப்பான், ஆனா யாரும் அவன்கிட்ட அக்கௌன்ட்ட  செட்டில்  பண்ணுனு கேட்டதேயில்ல, காரணம் அவன் மூஞ்சில எப்பயுமே இருக்குற சின்ன புன்னகையும், ஆள மயக்குற மாதிரியான பேச்சும் தான். சரியான பேச்சாளன், யார் கிட்ட எப்டி பேசணும்னு அவனுக்கு கரெக்டா தெரியும், விஜய் டி.வி  தமிழ் பேச்சு எங்கள் மூச்சுல பைனல் வரை போயிருந்தான். திருநெல்வேலி GCE வந்து கப்புனா yaarunnu  கேட்டா பாஸ்கரனு எல்லோரும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் அவன தெரியும், ஒரு நாள் எங்க faculty உன்ன ஏன் எல்லோரும் கப்புவாயன்னு கூப்பிடுறாங்கன்னு  கேட்டதுக்கு, "நான் வாயால பேசி பல கப்பு வாங்கிருக்கேன்னு", சொல்லி மழுப்பிட்டன். தமிழ் மன்றம் காலேஜ்ல ஆரம்பிச்சு எங்களுக்குள தீராத தமிழ் ஆர்வத்த உண்டு பண்ணினது அவன் தான். அவன் கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது , "மத்தவனுக்கு குடுக்க  எதுவுமே இல்லன்னு வருத்தப் படக் கூடாது, நம்ம கிட்ட பொங்கி வழியிற அன்பக் குடுத்தாலே போதுங்ரதுதான்".
  • கஜினி சூர்யா மாதிரி நினைவிழந்து போனாலும், மறக்கவே முடியாத ஒருத்தன் நாதஸ் என்கிற உலகநாதன், ஒரே வார்த்தையில சொல்லப் போன என்ன விட்டுட்டு அவன் எந்த வேலையுமே செஞ்சதில்ல, ஒரு நண்பன்கிட்ட சந்தோசத்த பகிர்ந்து கொள்கிற போது வர்ற நெருக்கத்தவிட , சில நெகிழ்ச்சியான விஷயங்கள பகிர்ந்துக்கிற போது வர்ற அந்யோன்யம் அதிகமானது. அவன் என்கிட்டே நிறைய சொந்த விஷயங்கள பகிர்ந்துருக்கான். அவன்கிட்ட நாங்க எல்லோரும் கத்துக்கிட்ட விஷயம். எந்த பிரச்சன வந்தாலும் கூலா எப்டி ஹான்டில் பண்றதுங்றதுதான்
  • பன்னிக்கு வலை போட்ட யார் இருப்பா, வேற யாரு பர்மா இருப்பன். பரமா சில பேருக்கு சாணி, எங்கள பொறுத்த வரை அவன் ஞானி. இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும் இதயம். காம்பஸ் இண்டர்வியு அன்னிக் கூட போர்வையை போத்திக்கிட்டு படுத்து தூங்குனவன். அவன பொறுத்த வரைக்கும் எதுவுமே பெரிய விஷயம்  இல்ல. ஆங்கிலத்துல neutral ன்னு  ஒரு வார்த்தை உண்டு, அதுக்கு  தமிழ்ல அர்த்தம் வேற எதுவும் இல்ல  பர்மா தான்.வாழ்கையில கடைசி வரை கத்துக்கிட்டே இருந்த எப்போ வாழுறதுன்னு சொல்லுவான்.


இன்னும் நிறைய பேர பத்தி நினைக்குறதுக்குல பஸ் நான் போக வேண்டிய இடத்துக்கு போயிடுச்சு, எங்கள் கல்லூரி வாழ்கையை அழகாக்கிய இந்த நாலு மாதிரி உங்க வாழ்க்கைலயும் நிறைய பேர் இருப்பாங்க. அவங்கள எல்லாம் நினச்சிப் பாருங்க, மறந்தாத்தான நினைக்குறதுக்குன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான்.
 

நினைவுகள் நிழல் போன்றது நமக்குத் தெரியாமலே நம்மைத் தொடரும்.

2 comments:

  1. பிரமாதமான பதிவு... என் கல்லூரி, உன் நண்பர்கள்... ஆனால் நண்பர்கள் எப்பொழுது ஒன்று போலவே... இங்கே குறிப்பிட்டிருப்பவர்களுள் பாஸ்கரனை எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் இறுதி ஆண்டு பாப்பையா பட்டி மன்றத்தில் என்னோடு பேசியவன். சில நாட்கள் பழக்கமே.

    தொடர்ந்து எழுதவும்... வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete

சொலவடை