போதும் இன்னும் ஓராயிரமாண்டுகளுக்கு
உன்னை ஒரு தலையாய் காதலிப்பேன்
உன்னை என்னால்
ஒரு தலையாய் தான்
காதலிக்க முடியும்
நான் என்ன ராவணனா
பத்து தலையாய் காதலிக்க
நீ ஹார்லிக்சை மட்டும் அல்ல
என்னையும் சாப்பிட்டு விட்டாய்
அப்படியே....
உன் பெயரை அதிகமாக
உச்சரித்ததாலோ என்னவோ
எனக்கு வந்து விட்டது
சக்கரை வியாதி....
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
என் கண்கள் பார்த்துக் கொண்டே
இருக்கும் அசையாமல்
இப்பிறவியில் மனிதனாக
பிறந்ததற்காக பெருமை
பட்டுக்கொள்ளாதே...
போன பிறவியில் நீதான்
அவளை கடித்த கொசு
உன்னை கடித்த மீன்கள்
இருந்த ஆற்றை கொளுத்த
முயன்று தோற்றவன் நான்
என் டைரி முழுக்க காதல் கவிதை
எழுதுவதாக சபதம் ,
ஒரு பக்கத்தை கூட விடக்கூடாது
பேனாவை எடுத்தேன்
முதலில் உன் பெயரைத்தான் எழுதினேன்
என்னவோ டைரி முழுக்க
கவிதை எழுதிவிட்டதாய் உணர்வு
மூடி வைத்து விட்டேன்
என் மனதை தவிர
மற்ற அனைத்தையும்
No comments:
Post a Comment