ஒரு
முறை ஒரு நகரத்தின் வழியே ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட இந்தியன் ,
ஒரு சீனாக்காரன் பயணித்துக்கொண்டிருந்தார்கள் , அவர்களுக்கு பசி
ஏற்பட்டது , ஆகவே தாங்கள் கொண்டுவந்திருந்த காசுகளை ஒன்றாக போட்டு ஏதாவது
பழம் வாங்க முடிவு செய்தனர் , அவர்களுக்கு தங்கள் தாய் மொழி தவிர வேறு
ஏதும் தெரியாது ... தமிழன் எனக்கு வாழைப்பழம் தான் வேண்டும் என்றான் ,
ஆங்கிலேயன் I want banana என்றான் , வட இந்தியன் எனக்கு kēlē(கேளே)
வேணும் என்றான், சீனன் எனக்கு Xiāngjiāo(சியஞ்சியோ) வேண்டும் என்றான் ,
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் தாங்கள் கேட்ட பழம் தான் வேண்டும்
என்று சண்டை இட்டுக்கொண்டனர் . அவ்வழியே வந்த ஒரு பெரியவர் இவர்களிடம்
பணத்தை வாங்கிக் கொண்டு பழக் கடைக்குப் போய் , ஒரு சீப்பு வாழைப்பழம்
வாங்கிக் கொண்டு வந்தார், அதைப் பார்த்த தமிழன் இது தான் நான் கேட்ட வாழை என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் ,ஆங்கிலேயனும் this is banana what I asked என்று ஒன்றை எடுத்துக் கொண்டான், வட இந்தியன் இது தான் நான் கேட்ட பழம் kēlē(கேளே) , என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் , சீனனும் இது தான் நான் கேட்ட பழம் Xiāngjiāo(சியஞ்சியோ) என்று ஒன்றை எடுத்துக் கொண்டான். அவர்கள் அனைவரும் பின் பயணத்தை தொடர்ந்தனர் .
இப்பிடித்தான் நாமளும் ஒரே கடவுளை பல மதங்களின் வழியாக கரெட்டா தப்பா புரிஞ்சிக்கிட்டு சண்ட போட்டுக்கிட்டே இருக்கோம் ......
ஒரு சூபி கதையை தழுவி எழுதப்பட்டது
No comments:
Post a Comment