விழிகளை தவிர வேறு
வழிகளும் இல்லை ,
மொழிகளும் இல்லை
எப்படித்தான் I love you என்று
அந்நிய மொழிகளில் எல்லாம்
காதலை பறிமாற்றிக்
கொள்கிறார்களோ ....
படிக்காத பாமரனுக்கு
வந்ததாம் காதல்
எழுதுகிறான் கவிதை
000 ----0000 -----0000
காதலியிடம் தந்தான் கவிதையை
அவளும் படிக்காத பாமரத்தி
முட்டைகளும் கோடுகளுமாய்
பதில் கவிதை எழுதி தந்தாள்
பின் அவர்கள் இருவரும் சேர்ந்து
கவிதை எழுதினார்கள்
அதில் கோடுகள் கொஞ்சல்களாகவும்
முட்டைகள் முத்தங்களாகவும்
மாறினவாம் .....
No comments:
Post a Comment