மனதிற்கு
நிம்மதி தரும் விஷயம் அஜித்தின் சிணுங்கல் இல்லாத சாதாரண நடிப்பு. முதல்
பாதி முழுக்க குடித்து கொண்டே தான் இருக்கிறார்கள் அஜித்தும் அவரது
சகாக்களும். தல, ரசிகர்கள் நல்லா இருக்கணும்னுதான ரசிகர் மன்றத்த
கலைச்சீங்க. உண்மையிலேயே நீங்க ரசிகர்களுக்கு நல்லது பண்ணனும்னா இந்த
மாதிரி காட்சிகள்ல நடிக்கவே கூடாது. ஏன் தல இடையில ஒரு வசனம் பேசுவீங்களே
”காமடி பண்றதுக்கு நான் என்னா சந்தானமான்னு” . நான் தெரியாமதான் கேக்குறேன்
வெங்கட் பிரபு என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா, அவரு படம் மட்டும்தான்
காமெடியா இருக்குன்னு நெனப்பா?.
முக்கியமா ஒரு விசயம் படத்துல அஞ்சலியையும், ஆன்ரியாவையும் கடத்துறது
சீனுக்கு மட்டும் யூஸ் பண்ணீ ருக்கிங்க. அந்த நடிகைகளின் மார்க்கெட்
கண்டிப்பா இனி பாதாளத்துக்கு போய்டும். த்ரிஷா பத்தி பேச விரும்பல.லக்ஷ்மி
ராய்தான் ப்ரேம்ஜி யோட சோடியாம் #என்ன கொடும சார் இது?
படத்துல பெரும்பாலும் ஃபைட்டும் ச்சேசிங்கும்தான் வருதுங்கிறதுனால
ஒளிப்பாதவாளர் சக்தி சரவணன் ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அற்புதமான
ஒளிப்பதிவு. யுவன் சங்கர் ராஜா இசை அற்புதம்.ஆனா வெங்கட் பிரபுவுக்குன்னு
வழக்கமா ஒரு டெம்ப்லேட் வச்சிருபீங்க போல.
கடைசியாக தலைக்கு ரசிகனின் அன்பு வேண்டுகோள் இரண்டு
1) குடி குடியை கெடுக்கும்
2) அல்லக்கைகளின் நட்பு மரியாதையை கெடுக்கும்
No comments:
Post a Comment