படத்தோட பேஸ் லைன் ஆயுத எழுத்து படத்தில இருந்து எடுத்து இருக்காங்க.
அதோட தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி சில பல ட்விஸ்ட் +இரட்டை அர்த்த
வசனங்கள் + சம்பந்தம் இல்லாம சில இடங்கள்ள வர்ற பாடல்கள் = கோ. நல்ல
கமெர்சியல் படம் தான், இருந்தாலும் படத்தோட முதல் பாதி ஏற்படுத்தின
பாதிப்பு அளவுக்கு இரண்டாவது பாதி ஏற்படுத்தல. முதல் பாதி சங்கர் படங்களோட
கிளைமாக்ஸ் வசனம் மாதிரி மனச பாதிக்கும், இரண்டாவது பாதி கருத்து
சொல்றதுக்காக படம் எடுக்கலன்ற மாதிரி
போயிடும். சில இடங்கள்ள பிரகாஸ் ராஜ் , ஆயுத எழுத்து பாரதி ராஜாவ ஞாபக
படுத்துறாரு. ஆனா பாரதி ராஜா அளவுக்குலாம் வர முடியாது. படத்தோட பெரிய பிளஸ் ஒளிப்பதிவுதான்.
படத்தோட ஒரே ஸ்பெஷல் ஒளிப்பதிவு தான். கே.வி.ஆனந்தோட மூணாவது படம்
இது,அவரோட முதல் இரண்டு படங்களான கனா கண்டேன், அயன்,ல வர்ற மாதிரி, ஹீரோ
வோட உயிர் நண்பனே துரோகம் பண்றமாதிரி தான் இந்த படத்துலயும் சீன் வச்சு
இருக்காரு. So ஆனந்த் சார் உங்க அடுத்த படத்துல என்ன ட்விஸ்ட் வரும்னு
நாங்க இப்பவே கண்டு புடிச்சிட்டோம். படத்துல வர்ற
டாக்டர், இன்ஜினியரிங் பசங்க எல்லாம் ஒரே காலேஜ் படிக்கிற மாதிரி ஏன்
காட்டுனீங்க? கிளைமாக்ஸ் வர்ற சண்டை காட்சி ரொம்ப போர். மத்தபடி கார்த்திகா
ரசிகர் மன்றத்துக்கு நான் அப்ளிகேசன் போட்டுட்டேன்.
பின்குறிப்பு: அவசியம் பாருங்க
No comments:
Post a Comment