சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்


                வேலை தேடி சென்னையில் அலைந்து திரிந்த நாட்கள், அன்று எப்போதும் போல ஊரெல்லாம் அலைந்து திரிந்து இரவு ஏழு மணிக்கி எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறினேன்டிக்கட் எடுத்தது போக மிச்சம்   எங்கிட்ட இருந்தது நைந்து போன  ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே. தூரத்துல "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்பாட்டு பாடிக்கிட்டே கண்ணு  தெரியாத ஒருத்தர் எங்க கம்பார்ட்மேன்ட்ட நோக்கி காசு கேட்டுக்கிட்டே நடந்து வந்துக்கிட்டு இருந்தார். அவர்  பாடுவது TMS பாட நேரில் கேட்பது போல அற்புதமாக இருந்தது. வாசல் அருகில் உக்காந்து பூ கட்டி கொண்டிருந்தவர்கள் பாட்டை ரசித்தவாறே பூ கட்டிக் கொண்டு இருந்தார்கள், அவர் அருகில் வர தங்கள் கையில் இருந்த சில சில்லறைகளை அவருக்கு ஆசையாக கொடுத்தனர். பூ கட்டிக்கொண்டு இருந்தவர்கள்  பக்கத்தில் நின்று  எதையும் கண்டு கொள்ளாதவன் போல இருந்த அந்த சீமானை நோக்கி, " த சும்மா நின்னுகினே இருக்கியே காசு போடுயா" ன்னு அன்பா சொன்னாங்க. அவன் எரிச்சலுடன் தன் பர்சின் மறைவான பகுதியில் வைத்திருந்த கத்தயான நோட்டுகளை ஒதுக்கி ஒத்தயான ஒரு ரூபாயை போட்டான். அவனை கடக்கும் போது அவர் பாடியது " இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார், மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்", அவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார், எனது எல்லா பாக்கெட்டுகளிலும் கை விட்டு தேடி அந்த ஐந்து ரூபாய் நோட்டை அவருக்கு கொடுப்பதற்காக தயாராக வைத்துக் கொண்டேன். என்னை கடந்து போனபோது அவர் பாடியது, " பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போது தெய்வம் கொடுத்ததில்லை." இன்று வரை அந்த பாடல் என் காதுகளில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான், இல்லை ஊருக்காக கொடுத்தான்.
தனக்கென்று ஒன்று, பிறர்க்கென்று ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

No comments:

Post a Comment

சொலவடை