எல்லோரும் தாங்கள் வாங்கிய தின் பண்டங்களை கொறிக்க தொடங்கினார்கள் .
எங்கேயாவது ஒரு பாக்கெட் பிரிக்கும் சத்தம் கேட்டால் ,அந்த சத்தம் வந்த
திசையை நோக்கி தலை திருப்பி கையை நீட்டுவார் அந்த பெரியவர் , அவர்களும்
பெரியவருக்கு தின்ன கொஞ்சம் தருவார்கள் . என் பக்கத்தில் சுமார் முப்பது
வயது இருக்கக் கூடிய ஒருவன் தான் வாங்கி வந்த கடலை பொட்டலத்தை மிகவும்
நுட்பமாக யாருக்கும் சத்தம் கேட்டகாமல் மெல்ல திறந்து அந்த பெரியவருக்கு
தெரியாமல் சாப்பிட்டு முடித்து விட்டான் . இன்னொருவனோ அந்த பெரியவர் கை
நீட்ட , அதை கவனிக்காதவன் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் .
இவர்களுக்கு மத்தியில் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் என்ன செய்வதென
தெரியாமல் நான் உக்கார்ந்து கொண்டிருந்தேன் . பெரியவரின் கவனம் பிரிக்கப்
படாத என் ரொட்டி பாக்கெட்டின் மேல் திரும்பியது ,
அவருக்கு அப்படியே கொடுத்து விடலாம் என்று
எண்ணிக்கொண்டே இருக்கையில் என்னுடைய நிறுத்தம் வர இறங்கி விட்டேன் கையில்
அந்த பாக்கெட்டுடன். என் பக்கத்தில் உக்காந்திருந்த அந்த இரண்டு பேரை விட
என்னை நான் கேவலமாய் உணர்ந்தேன்.
No comments:
Post a Comment